திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி அடுத்த தெள்ளார் ஊராட்சியில் ஃபெஞ்சல் புயல் மற்றும் கனமழையில் 4 வீடுகளின் சுவர்கள் இடிந்து பாதிக்கப்பட்டனர். இவர்களின் குடும்பத்திற்கு அடிப்படை வாழ்வாதாரமாக ஆரணி எம்பி எம்.எஸ்.தரணிவேந்தன் மற்றும் வந்தவாசி எம்எல்ஏ எஸ்.அம்பேத்குமார் ஆகியோர் பாதிக்கப்பட்ட குடும்பத்தினரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி அவர்களுக்கான நிவாரணம் மற்றும் நிதியுதவியை வழங்கினார்கள்.
இந்த நிகழ்ச்சியில் ஒன்றிய கழக செயலாளர்கள் டிடி.ராதா, சுந்தரேசன், ஒன்றிய கவுன்சிலர் சுகந்தினி கோபிநாதன், ஊராட்சி மன்ற தலைவர் டிகேஜி.ஆனந்தன் மற்றும் கழக நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.
செய்தியாளர்: பா. சீனிவாசன், வந்தவாசி.