திருவாரூரில் செயல்பட்ட RMS அஞ்சல் பதிப்பகத்தை மூடும் மத்திய அரசை கண்டித்து, திருவாரூர் தபால் தலைமை அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருவாரூர், நாகை ஆகிய இரண்டு மாவட்ட மக்களுக்கு விரைவாகவும் எளிமையுடனும் பணியாற்றி வந்த திருவாரூர் RMS அஞ்சல் பதிப்பகத்தை மூடுவதாக மத்திய அரசு அறிவித்தது. இதனால் அரசு அலுவலகங்கள் மற்றும் வர்த்தகர்கள் மாணவர்கள் பொதுமக்கள் இனி மாலை 6 மணிக்கு மேல் தபால்களை அனுப்ப முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது .
மத்திய அரசின் மக்கள் விரோத போக்கை கண்டித்து திருவாரூர் தபால் தலைமை அலுவலகத்தை அனைத்து கட்சியினர் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தப்படும் என அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. அதன்படி இன்று அனைத்து அரசியல் கட்சியினர், வர்த்தக சங்கத்தினர்,
தொழிற்சங்கத்தினர், சமூக அமைப்புகள், திருவாரூர் சட்டமன்ற உறுப்பினர் பூண்டி கலைவாணன் மற்றும் நாகப்பட்டினம் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராஜ் தலைமையில் 100க்கும் மேற்பட்டோர் மத்திய அரசை கண்டித்து திருவாரூரில் அமைந்துள்ள தலைமை தபால் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.