அலங்காநல்லூர்,
உலகப்புகழ் பெற்ற பாலமேடு ஜல்லிக்கட்டு விழா வருகின்ற ஜனவரி மாதம் 15ஆம் தேதி வெகு விமர்சையாக நடைபெற உள்ளது. இதையொட்டி ஜல்லிக்கட்டு விழா ஏற்பாடுகளை தொடங்குவதற்கு முன்பாக பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் பிரசித்தி பெற்ற வலையபட்டி, ஸ்ரீமஞ்சமலை சுவாமி திருக்கோவிலில் ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழை வைத்து சிறப்பு பூஜை செய்தனர்.
அதனைத் தொடர்ந்து பாலமேட்டில் உள்ள மஞ்சமலை ஆற்று திடல் வாடிவாசலில் சிறப்பு பூஜை செய்தனர். இந்த நிகழ்வில் மடத்து கமிட்டி தலைவர் மச்சவேல், செயலாளர் பிரபு, பொருளாளர் கார்த்திக் மற்றும் மடத்து கமிட்டி உறுப்பினர்கள் கலந்து கொண்டனர். முதற்கட்டமாக ஜல்லிக்கட்டு விழா அழைப்பிதழ் வழங்கும் பணிகள் தொடங்கப்பட்டது. அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள், ஊர் பெரியோர்கள் என அனைவருக்கும் அழைப்பிதழ் வழங்க உள்ளனர்.