கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணம் அருகே அய்யம்பேட்டை ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி….
100-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பங்கேற்பு….
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே அய்யம்பேட்டையில் உள்ள ஸ்டார் லயன் கல்வியியல் கல்லூரி சார்பில் டெங்கு விழிப்புணர்வு பேரணி கல்லூரி தாளாளர் கலியமூர்த்தி தலைமையில் நடைபெற்றது.
இதில் முதலாம் ஆண்டு மாணவ ஆசிரியை மோனிகா ஜெனிபர் வரவேற்புரை ஆற்றினார்.
இப்பேரணியில் கல்லூரி முதல்வர் மில்டன்ராஜ் , தாளாளர் ஜோதி கலியமூர்த்தி, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் கணேசன் ஆகியோர் கலந்துகொண்டு கொடியசைத்து பேரணியை துவக்கி வைத்தனர்.
இப்பேரணி கல்லூரி வளாகத்தில் இருந்து தொடங்கி கிருஷ்ணன் கோயில் , அரசு மருத்துவமனை வரை நூற்றுக்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்துகொண்டு கையில் டெங்கு விழிப்புணர்வு பதாகைகளுடன் முக்கிய வீதிகள் வழியாக பேரணியாக சென்றனர்.
இந்நிகழ்ச்சியில் கல்லூரி பேராசிரியர்கள் எழிலரசி, ராமச்சந்திரன் , இலக்கியா, ரூபிலா ,சரண்யா , மற்றும் மாணவ மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் முதலாம் ஆண்டு மாணவ ஆசிரியை சங்கவி நன்றி கூறினார்.