தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ள குச்சனூர் பேரூராட்சியில் 1.80 லட்சம் மதிப்பீட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைத்து குடிநீர் விநியோகம் பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் திறந்து வைத்தார்
தேனி மாவட்டம் சின்னமனூர் அருகே உள்ளது குச்சனூர் இந்த ஊரில் சனீஸ்வர பகவான் கோவில் இருப்பதால் மாவட்டத்தில் மிக சிறப்பு வாய்ந்த பேரூராட்சியாகும் இந்த பேரூராட்சியில் பொதுமக்கள் மற்றும் கோவிலுக்கு வரும் பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வசதிக்காக குடிநீர் தொட்டி அமைத்து தர வேண்டும் என்று பொதுமக்கள் பேரூராட்சிக்கு கோரிக்கை வைத்தனர்
இந்த கோரிக்கையை உடனடியாக பரிசலீத்து பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று பேரூராட்சி மன்ற தலைவர் பி டி ரவிச்சந்திரன் மற்றும் துணைத் தலைவர் மணிகண்டன் மற்றும் வார் டு உறுப்பினர்கள் பேரூராட்சி மன்ற கூட்டத்தில் ஒரு மனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது
இதை யடுத்து பேரூராட்சி குச்சனூர் சனீஸ்வர பகவான் கோவில் அருகில் 1.80 இலட்சம் மதிப்பீட்டில் பாதுகாக்கப்பட்ட குடிநீர் தொட்டி அமைக்கப்பட்டது
இந்த குடிநீர் தொட்டியை பொதுமக்கள் மற்றும் சுற்றுலாப் பயணிகள் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கும் பயன்படும் வகையில் குடிநீர் தொட்டி பொதுமக்கள் பயன்பாட்டிற்கு பேரூராட்சி மன்ற தலைவர் பி டி ரவிச்சந்திரன் திறந்து வைத்தார்
இந்த நிகழ்ச்சியில் பேரூராட்சி செயல் அலுவலர் முருகன் பேரூராட்சி துணைத் தலைவர் மணிகண்டன் பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளவரசு அனைத்து பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் மற்றும் பேரூராட்சி பணியாளர்கள் ஊழியர்கள் பலர் கலந்து கொண்டனர். பேரூராட்சி இளநிலை உதவியாளர் இளவரசு நன்றி கூறினார்