முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவு தினம்
துறையூரில் அதிமுக சார்பில் அன்னதானம்
துறையூர்
திருச்சி மாவட்டம் துறையூர் பேருந்து நிலையம் முன்புறம் அதிமுக நகர செயலாளர் அமைதிப்பாலு தலைமையில் புரட்சித்தலைவி ஜெ ஜெயலலிதாவின் 8ஆம் ஆண்டு நினைவஞ்சலி அனுசரிக்கப்பட்டது. இதில் திருச்சி வடக்கு மாவட்ட கழக செயலாளர் பரஞ்ஜோதி கலந்து கொண்டு புரட்சித்தலைவி ஜெயலலிதாவின் திருவுருவப்படத்திற்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தி பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார்.
இந்நிகழ்வில் மாவட்ட பொருளாளர் முன்னாள் எம்எல்ஏ இந்திரா காந்தி,மாவட்ட விவசாய அணி செயலாளர் பொன் காமராஜ், வழக்கறிஞர் அணி அன்பு பிரபாகரன்,நகர அவைத் தலைவர் ரவிவர்மா, மாவட்ட பிரதிநிதி மருதமுத்து, ஒன்றிய செயலாளர்கள் ராம்குமார், செல்வராஜ், பேரூர் கழக செயலாளர் ராஜாங்கம்,மைவிழி அன்பரசன், எம்ஜிஆர் மன்ற மாவட்ட இணை செயலாளர்கள் கவிதை மணி,ரவி,அம்மா பேரவை துணை செயலாளர்,நகர்மன்ற உறுப்பினர் தீனதயாளன்,அம்மா பேரவை ராமஜெயம்,இளைஞர் அணி விவேக், வடிவேல்,அபி இளங்கோவன் மற்றும் மாவட்ட நகர ஒன்றிய நிர்வாகிகள் தொண்டர்கள் கலந்து கொண்டு மலரஞ்சலி செலுத்தினர்.
வெ. நாகராஜீ
திருச்சி மாவட்ட செய்தியாளர்