முன்னாள் படைவீரர்கள் நலன் துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் தொடர்பான கூட்டம்…
திருவாரூர் மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் முன்னாள் படைவீரர்கள் நலன் துறையின் சார்பில் படைவீரர் கொடிநாள் தொடர்பான கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.ஜெயக்குமார் உடனிருந்தார்.
நம் பாரத திருநாட்டின் எல்லைகளை இரவு பகலாகக் காத்திடும் முப்படைவீரர்களின் அரும்பணிகளையும் தியாகத்தையும் போற்றிடும் வகையில் ஒவ்வொரு ஆண்டும், டிசம்பர் திங்கள் 7ஆம் நாள் படைவீரர் கொடிநாளாக அனுசரிக்கப்படுகிறது
இதனைத் தொடர்ந்து முன்னாள் படைவீரர்களின் நலன்களை காப்பது நம் அனைவரின் சமுதாயக் கடமையாகும் இதனை நிறைவேற்றிடும் வகையில் கொடி விற்பனை மற்றும் நன்கொடை மூலம் திரட்டப்படும் நிதியினைக் கொண்டு முன்னாள் படைவீரர்களின் நலனுக்காக நிதியுதவி வழங்கப்பட்டு வருகின்றன
எனவே வருகின்ற படைவீரர் கொடிநாள் 2024-ம் ஆண்டிற்கு அதிக வசூல்புரிந்து மாவட்டத்திற்கு பெருமை சேர்த்திடும் வகையில் கொடிநாள் நிதிக்கு திருவாரூர் மாவட்ட மக்கள் அனைவரும் தாராளமாக நிதியினை வாரி வழங்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
முன்னதாக படைவீரர் கொடிநாள் அனுசரிப்பு 2024-ஐ முன்னிட்டு 07-12-2024 திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ, உண்டியலில் பணம் செலுத்தி படைவீரர் கொடிநாள் நிதி வசூலினை துவக்கி வைத்தார்
தொடர்ந்து, 11 முன்னாள் படைவீரர் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு தொகுப்பு நிதி திருமண மானியம் தொகுப்பு நிதி கல்வி உதவித்தொகை, கண்கண்ணாடி மானியம் என மொத்தம் 3 லட்சத்து 38 ஆயிரம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ வழங்கினார்.
கூட்டத்தில் திருவாரூர் மாவட்ட முன்னாள் படைவீரர் நல அலுவலக கண்காணிப்பாளர் க.துர்கா உள்ளிட்ட அரசு அலுவலர்கள் அதிகாரிகள் திருவாரூர் அரசு உதவி பெறும் வ.சோ.ஆண்கள் மேல்நிலைப்பள்ளியின் தேசிய மாணவர் படை மாணவர்கள் பங்கேற்றனர்