திருவாரூரில் தஞ்சை மண்டல தமுமுக சார்பில் மத்திய ஒன்றிய பாஜக அரசை கண்டித்து மக்கள் திரள் ஆர்ப்பாட்டம்.. திருவாரூரில் பயங்கரவாத எதிர்ப்பு நாளில் பள்ளிவாசல்களையும் வீடுகளையும் இடிக்கின்ற ஆய்வு என்ற பெயரில் பள்ளிவாசல்களை கபளீகரம் செய்கின்ற ஒன்றிய பாஜக அரசிற்கு எதிராக தஞ்சை மண்டலம் தமுமுக தலைமையில் திருவாரூரில் மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டம் தமுமுக மாநில செயலாளர் தைக்கால் முபாரக் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்வில் திருவாரூர் மாவட்ட தலைவர் எம் முஜிபுர் ரகுமான் தொகுப்புரை வழங்கினார்
நாகை மாவட்ட தலைவர் ஓ எஸ்.இப்ராஹிம் மயிலாடுதுறை மாவட்ட தலைவர் ஏ முகமது ஜுபைர், காரைக்கால் மாவட்ட தலைவர் அப்துல் ரஹீம் தஞ்சை மத்திய மாவட்ட தலைவர் எம் அப்துல் மஜீது, தஞ்சை வடக்கு மாவட்ட பொறுப்புக் குழு தலைவர் பி ஏ எஸ் ரஹ்மத் தஞ்சை தெற்கு மாவட்ட தலைவர் ஏ எஸ் இதிரிஸ் அஹமது மற்றும் மாநில நிர்வாகிகள் அணி நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர்
மனிதநேய மக்கள் கட்சியின் பொதுச் பொதுச் செயலாளரும் சட்டமன்ற உறுப்பினருமான ப.அப்துல் சமத் மூத்த ஊடகவியலாளர் தமிழ் கேள்வி செந்தில் வேல் மாநில தலைமை பிரதிநிதிகள் வெங்கலம் ஜபருல்லாஹ் நாகூர் ஜபருல்லாஹ், மதிமுக கொள்கை பரப்பு செயலாளர் கூடூர் சீனிவாசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.
நகர தலைவர் ஹலில் ரஹ்மான் நன்றி கூறினார்
மாபெரும் மக்கள் திரள் ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட நிர்வாகிகள் துணை அணி நிர்வாகிகள் ஒன்றிய நகர பேரூர் கிளை கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் ஜமாத்தார்கள் பொதுமக்கள் உள்பட சுமார் 4000க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்