எஸ்.செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
தேசிய சமூக நலனுக்கான விருது பெற்றவருக்கு சீர்காழியில் பாராட்டு

எஸ். பி ஜெயின் மேலாண்மை மற்றும் ஆராய்ச்சி நிறுவனத்தின் தேசிய அளவிலான சமூக நலன் விருதை சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படும் தொண்டு நிறுவனமான சேவாலயா பெற்றது. இந்த அமைப்பானது தமிழக முழுவதும் சேவை திட்டங்களை நடத்துகின்றது.
குறிப்பாக இந்த அமைப்பின் சார்பாக சீர்காழியில் கல்விப் பணியாற்றி வருகின்ற சபாநாயக முதலியார் இந்து மேல்நிலைப் பள்ளியில் ஒரு கணினி அறையை ஏற்படுத்தி கிராமப்புற மாணவர்கள் கணினி நுண்ணறிவு பெறுவதற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.
ஏழை எளியோர் மற்றும் கிராமப்புற மக்களுக்கு உடல்நலம் ஊட்டச்சத்து தண்ணீர் மற்றும் சுகாதார வசதிகள் வழங்குவதில் நாட்டின் தலைசிறந்த அமைப்பாக சேவாலயா தேர்வு செய்யப்பட்டது. அண்மையில் கேரள மாநிலம் வயநாட்டில் நிலச்சரிவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பொருள் உதவி செய்தனர்,
36 வருடங்களாக சமூக சேவையாற்றி வரும் சேவாலயா த் திறன் மேம்பாடு ஆரோக்கியம் ஆதரவற்றோர் இல்லங்கள் மற்றும் கிராம வளர்ச்சி ஆகிய துறைகளில் பணியாற்றி வரும் இந்நிறுவனத்தின் நிறுவனரான வி. முரளிதரன் அவர்களுக்கு தேசிய அளவிலான சமூக நலனுக்கான விருதினை மும்பையில் பெற்று சீர்காழிக்கு வருகை தந்த பெருந்தகைக்கு சீர்காழி புறவழிச் சாலையில் ச.மு. இந்து மேல்நிலைப்பள்ளியின் உடற்கல்வி இயக்குனரும், உதவி தலைமை ஆசிரியருமான எஸ். முரளிதரன், பள்ளியின் அறிவியல் பட்டதாரி ஆசிரியர் எஸ்.சேதுராமன், நம்ம சீர்காழி பவுண்டேஷன் அமைப்பின் நிறுவனத் தலைவர் டாக்டர் சி.மகேஸ்வரன், அமைப்பின் உறுப்பினர் செந்தில், ஆரோக்கிய அன்னை பாரா மெடிக்கல் கல்லூரி தாளாளர் டாக்டர் ஞானசேகரன், ஆகியோர் கலந்து கொண்டு சென்னை சேவாலயாவின் சேவை குறித்து பாராட்டி சிறப்பு செய்தனர்.