வேப்பூர்

கடலூர் மாவட்டம் வேப்பூர் அருகிலுள்ள. மாளிகைமேடு கிராமத்தை சேர்ந்த குமரசாமி மகன் அன்பழகனுக்கு சேப்பாக்கம் கிராமத்தை சேர்ந்த ராஜா மகள் நித்யாவிற்க்கும் கடந்த ஆறரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது

இவர்களுக்கு ஐந்து வயதில் அனிஸ் என்ற ஆண் குழந்தையும், இரண்டு வயதில் கோபிகா என்ற பெண் குழந்தையும் உள்ளனர்
இந்நிலையில் கணவன் மனைவிக்குள் அடிக்கடி சண்டை வந்துள்ளது
நேற்றும் அதுபோல் கணவன் மனைவிக்குள் சண்டை போட்டதால் மனவேதனை அடைந்த நித்யா அக்கிராமத்தில் உள்ள ஊராட்சி மன்றத்திற்கு சொந்தமான கிணற்றில் தனது இரண்டு குழந்தைகளையும் தூக்கி போட்டுவிட்டு தானும் கிணற்றுக்குள் விழுந்து தற்கொலை செய்து கொண்டார்

கிணற்றில் மூவரும் இறந்து மிதந்ததை கண்ட அவ்வூர் கிராம மக்கள் சிறுபாக்கம் போலிசாருக்கு தகவல் அளித்தனர்

அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் இறந்த மூவரின் உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக விருத்தாசலம் அரசு மருத்தவமனைக்கு அனுப்பி வைத்தனர் மேலும் இறந்த நித்யாவின் கணவர் அன்பழகனை சிறுபாக்கம் காவல் நிலையம் அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்
ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் தற்கொலை செய்து கொண்டது அக்கிராம மக்கள் மத்தியில் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *