கோவையில் மணமகள் ஒப்பனை செய்யும் கலைஞர்களுக்கு பிரத்தியேக பயிற்சி மையம் திறக்கப்பட்டது.
பெண்களை தொழில் முனைவோராக ஆக்கும் வகையில் கோவை உக்கடம் பகுதியில் ஷிஃபா இன்ஸ்டிடியூஷன் செயல்பட்டு வருகிறது.இங்கு பெண்களுக்கு எளிய முறையில் தையல் பயிற்சி வழங்கப்பபடுவதுடன், பள்ளி மாணவ மாணவிகளுக்கு டியூஷன் எடுக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இதனை தொடர்ந்து புதியதாக ஷிஃபா பிரைடல் அகாடமி எனும் மணமகள் ஒப்பனை செய்யும் பயிற்சி மையம் துவங்கப்பட்டது.இதனை சர்வதேச ஒப்பனை கலைஞர் பொண்ணி மற்றும் சின்னத்திரை நடிகர் அருண் கார்த்தி ,சிபிஎம் கல்லூரியின் முதல்வர் சிங்காரவேலு ஆகியோர் ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர்.
இந்த மணமகள் ஒப்பனை செய்வதற்கான அடிப்படை ஹேர் ஸ்டைலை மேம்படுத்துதல்,டிப்ஸ் மற்றும் டிரிக்ஸ் கொண்ட தொழில்நுட்பம்,எச்டி & அல்ட்ரா எச்டி மேக்கப்,மேக்கப் டெக்னிக்,கிளாஸ் ஸ்கின், மேக்கப் லுக்,லைவ் டெமோவுடன் ஸ்கின் டோன் மேக்கப் டெக்னிக்குகள்,வெவ்வேறு வகையான கண் ஒப்பனை நுட்பங்கள்,ஸ்வெட் ப்ரூஃப் & வாட்டர் ப்ரூஃப் மேக்கப் டெக்னிக்,மெஹந்தி வகுப்பு மாணவர்களின் போர்ட்ஃபோலியோ,அரசு சான்றளிக்கப்பட்ட படிப்பு,புடவை பெட்டி பூசுதல் மற்றும் வரைதல் உள்ளிட்டவை பயிற்சி அளிக்கப்படுகிறது.