திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் திங்கட்கிழமைதோறும் நடைபெறும் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ தலைமையில் நடைபெற்றது.
கூட்டத்தில் பொதுமக்கள் பட்டா மாறுதல், புதிய குடும்ப அட்டை ஆக்கிரமிப்பு அகற்றுதல் கல்விக்கடன் வீட்டுமனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் குறித்து 381 மனுக்களை மாவட்ட ஆட்சியர் அவர்களிடம் அளித்தனர்.
பொதுமக்களிடம் விசாரித்து மனுக்களை பெற்றுக்கொண்ட மாவட்ட ஆட்சியர் சம்மந்தப்பட்ட துறை அலுவலர்களிடம் பொதுமக்களின் கோரிக்கை மனுக்களை வழங்கி குறித்த காலத்திற்குள் உடனடியாக விரைவில் துரித நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என உத்தரவிட்டார்
அதனைத் தொடர்ந்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் சார்பில் ஐந்து நபர்களுக்கு தக்க செயல்திறன் உடைய கைப்பேசி திட்டத்தின் கீழ் 80 ஆயிரத்து 995 மதிப்பீட்டில் கைபேசிகளை மாவட்ட ஆட்சியர் வழங்கினார்
கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலர் கு.சண்முகநாதன் மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் புவனா உள்பட அனைத்து துறை அரசு உயர் அலுவலர்கள் அதிகாரிகள் பங்கேற்றனர்