திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கனமழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு நிவாரணம் வழங்க வலியுறுத்தி 500க்கும் மேற்பட்ட விவசாயிகள்… திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு முன்பாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்”
திருவாரூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த கன மழை காரணமாக பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கர் ஒன்றுக்கு 25 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டியும் ,தொடர் கனமழையால் சேதம் அடைந்த வீடுகள் மற்றும் உயிரிழந்த கால்நடைகளுக்கு உரிய நிவாரணம் வழங்கிட வேண்டியும், 2023 – 2024 ஆண்டிற்கான பயிர் காப்பீடு இழப்பீட்டுத் தொகையை முழுமையாக விவசாயிகளுக்கு வழங்க வேண்டும் என வலியுறுத்தியும் தமிழ்நாடு விவசாயிகள் நல சங்கத்தின் சார்பாக 500க்கும் மேற்பட்ட விவசாயிகள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு திரண்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டார்கள் அப்பொழுது காப்பீட்டு நிறுவனத்திற்கு எதிரான கோஷங்களை எழுப்பினார்கள் இந்த ஆர்ப்பாட்டம் தமிழக விவசாயிகள் நல சங்க தலைவர் சேதுராமன் தலைமையில் நடைபெற்றது