கும்பகோணம் செய்தியாளர்
ஆர்.தீனதயாளன்
குடவாசலில் இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தி 78வது பிறந்த நாள் கொண்டாட்டம்….
திருவாரூர் மாவட்டம் குடவாசல் நகர , வட்டார இந்திய தேசிய காங்கிரஸ் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவர் சோனியா காந்தியின் 78வது பிறந்த நாளை முன்னிட்டு குடவாசல் பேருந்து நிலையத்தில் குடவாசல் வட்டார தலைவர் மிணியஅய்யா தலைமையில் நடைபெற்றது.
இந்நிகழ்ச்சியில் திருவாரூர் மாவட்டதலைவர் துரைவேலன் கலந்து கொண்டு சிறப்புரையாற்றி 500க்கும் மேற்பட்ட பொதுமக்களுக்கு மதிய உணவு வழங்கினர்.
இந்நிகழ்ச்சியில் குடவாசல் நகர தலைவர் செந்தில்வேலன் , எஸ்சிஎஸ்டி திருவாரூர்மாவட்ட தலைவர் மஞ்சக்குடிரவி , சிறுபான்மைபிரிவு வட்டாரத்தலைவர் சிராஜுதீன் ஆகியோர் கலந்து கொண்டனர்.