திண்டுக்கல் மாவட்டம் பழனி, கொடைக்கானல் ரோடு தேக்கந்தோட்டம் பகுதியில் தமிழ்நாடு வனத்துறை மற்றும் கால்நடை பராமரிப்புத் துறையின் சார்பாக வனப்பகுதிக்கு அருகில் உள்ள கால்நடைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. இதன் மூலம் வனத்தை ஒட்டியுள்ள கிராம பகுதிகளில் உள்ள, கால்நடைகள் மூலம் வனத்திற்குள் வாழும் வனவிலங்குகளுக்கு நோய் பரவாமல் தடுக்க முடியும். மேலும், கால்நடைகளை நோய் இல்லாமல் வாழவைப்பதுடன் வனத்தை ஒட்டி உள்ள கிராமங்களின் சுற்றுச்சூழலையும் பாதுகாக்கலாம். இந்த தடுப்பூசி முகாமில் பழனி கால்நடை பராமரிப்பு துறை உதவி இயக்குனர் மருத்துவர் சுரேஷ், பாலசமுத்திரம் கால்நடை உதவி மருத்துவர் செல்வகுமார், வனவர் பழனிச்சாமி ஆகியோர் கலந்து கொண்டனர்.