தாய்லாந்து நாட்டில் மாற்றுத்திறனாளி களுக்கான சர்வதேச அளவிலான இளைஞர் விளையாட்டுப் போட்டிகள் கடந்த வாரம் தொடங்கியது. இதில் தமிழ்நாடு பாரா விளை யாட்டு 13 வீரர், வீராங்கனைகள் தேர்வு பெற்றனர்.
அந்த போட்டியில் மதுரை மாவட்டத்தைச் சேர்ந்த லேடி டோக் கல்லூரி மாணவி அமுல்யா ஈஸ்வரி 400, 800, 1500 மீட்டர் ஓட்ட போட்டியிலும், மதுரையை சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவர் வருண் குண்டு எறிதல், வட்டு எறிதல் போன்ற போட்டி களிலும் பங்கேற்றனர். போட்டியின் முடிவில் மதுரை மாணவி அமுல்யா ஈஸ்வரி 800, 1,500 மீட்டர் ஓட்டப் போட்டியில் 2 தங்கப் பதக்கமும், 400 மீட்டர் ஓட்டப் போட்டியில் வெண்கல பதக்கமும் வென்றார்.
அதே போன்று மதுரை சட்டக்கல்லூரி மாணவர் வருண் குண்டு எறிதலில் வெள்ளிப்பதக்கமும், வட்டு எறிதலில் வெண்கல பதக்கமும் பெற்றார்.சர்வதேசபோட்டிகளில் சாதனை படைத்த மாற்றுத்திறனாளி கல்லூரி மாணவர்கள் கலெக்டர் சங்கீதாவை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது உதவி கலெக்டர் (பயிற்சி) வைஷ்ணவி பால், விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மதுரை மண்டல முதுநிலை மேலாளர் வேல்முருகன், மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜா, மாற்றுத்திறன் படைத்த வீரர்களின் பயிற்சியாளர் ரஞ்சித்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.