கும்பகோணம் செய்தியாளர்
ஆர். தீனதயாளன்
கும்பகோணத்தில் பட்டா இருக்கு, பத்திரம் இருக்கு நீர் நிலையில் இருப்பதாக புதிதாக கட்டிய வீட்டை இடித்த மாநகராட்சி நிர்வாகம்….
நிவாரணம் கேட்டு பெண் கண்ணீர் மல்க பேட்டி…
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணத்தில் உள்ள மேலக்காவேரி கே.எம்.எஸ் நகரில் வசித்து வருபவர் ஆஷா பரீக் ( வயது -45). இவர் (டவுன் சர்வே எண் -2068) என்ற மனைப்பிரிவில் அவர் பெயரில் மனை, இடமும் வாங்கி உள்ளார்.
அதற்கான பத்திரம் மற்றும் பட்டா அவரது பெயரில் பத்திர பதிவுத்துறையால் மாற்றப்பட்டுள்ளது.
மேலும் ,அவர் தனியார் வங்கியில் கடன் வாங்கி புதுப்பித்து வீடு கட்டியுள்ளார்.
இந்நிலையில் மாநகராட்சி நிர்வாகம் நீர் நிலைகளில் உள்ள ஆக்கிரமிப்பு வீடுகளை அகற்றும் பணியில் ஈடுபட்டனர்.
அப்போது ஆஷா பரீக் கட்டியுள்ள வீடு பணி நிறைவில் உள்ள நிலையில் நீர் நிலையில் ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் முதல் தளம் வரை கட்டப்பட்டுள்ள வீட்டினை இடித்து விட்டனர்.
இந்நிலையில் பட்டா பத்திரம் இருந்தும் எனது வீடு சட்ட விரோதமாக இடிக்கப்பட்டுள்ளதாகவும் , அந்த மலைக்கு பட்டா உள்ளது என்றும் அதில் ஒரு அங்குலம் கூட ஆக்கிரமிப்பு செய்யப்படவில்லை எனவும் மாநகராட்சி அதிகாரிகள் எனது வீட்டை நீர் நிலையில் இருப்பதாக கூறி இடித்து விட்டனர்.
கடன் வாங்கி வீடு கட்டிய எங்களை நடுத்தெருவில் நிறுத்திவிட்டனர் .
தமிழக அரசு உடனடியாக இழப்பீடு வழங்க வேண்டும் என்றும் பட்டா இடத்தை மீண்டும் எங்களுக்கு வழங்க வேண்டும் எனவும் குடும்பத்துடன் கண்ணீர் மல்க பேட்டி அளித்தார்….