திண்டுக்கல் மாவட்டம் சாணார்பட்டி அருகே 16 வயது சிறுமியை ஆசை வார்த்தை கூறி பாலியல் வன்கொடுமை செய்த வேம்பார்பட்டியை சேர்ந்த முருகன் என்ற குருசிலி (51) போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.இந்த நிலையில் எஸ்.பி பிரதீப் அறிவுறுத்தலின்படி இன்ஸ்பெக்டர் தங்க முனியசாமி,நீதிமன்ற முதல் நிலை காவலர் நதியா மற்றும் அரசு வழக்கறிஞர் மைதிலி ஆகியோரின் சீரிய முயற்சியால் நீதிபதி குற்றவாளி முருகன் என்பவருக்கு ஆயுள் தண்டனையுடன் கூடிய 6 ஆண்டுகள் சிறை தண்டனை மற்றும் ஒரு லட்சத்து 11 ஆயிரம் அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார்.