ரஜினிகாந்த் பிறந்த நாள்விழா” ராகவி சினி ஆர்ட்ஸ் சார்பில் குறும்பட இயக்குனரும், நடிகரும், தென்னிந்திய நடிகர் சங்க உறுப்பினரும், சமூக சேவகருமான சேவா ரத்னா டாக்டர் ஜெ.விக்டர் தலைமையில் நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்களின் பிறந்தநாள் விழா மிக மிக கோலாலமாக கொண்டாடப்பட்டது.
விழாவில் கெளரவ ஆலோசகர் எஸ்.டி.சுப்பிரமணியன், நடிகர் அப்பா பாலாஜி, எழுத்தாளர் விவேக் ராஜ், மேக்கப் ஆர்ட்டிஸ்டும், நடிகையுமான அங்கிதா, குழந்தை நட்சத்திரம் லியானா மற்றும் நடிகர்கள், நடிகைகள் அனைவரும் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள். அனைவருக்கும் கருங்காலக்குடி சந்துரு இனிப்புகளும், தேநீரும் வழங்கினார். ஒளிப்பதிவாளரும், நடிகருமான பிரேம்ஜி, ஆர்.அப்துர் ரஹீம், தலைவர் மீனா, பிரியா மற்றும் பலர் கலந்து கொண்டு வாழ்த்துக்கள் கூறினார்கள்.