திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை பெய்ய வாய்ப்புளதையடுத்து, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அனைத்துத்துறை அலுவலர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு

திண்டுக்கல் மாவட்டத்தில் கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளதையடுத்து மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து, திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட.பூங்கொடி அனைத்துத்துறை அலுவலர்களுடன் காணொலிக்காட்சி வாயிலாக ஆய்வு மேற்கொண்டார்.


ஆய்வின்போது திண்டுக்கல் மாவட்டத்தில் 12.12.2024 மற்றும் 13.12.2024 ஆகிய தேதிகளில் கனமழை முதல் மிக கன மழை பெய்வதற்கு வாய்ப்புள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. அதையடுத்து, மழை வெள்ள பாதுகாப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

அனைத்துறை அலுவலர்களும் தாழ்வான பகுதிகள், நீர்நிலைகள், கால்வாய்கள், ஓடை மற்றும் மழைநீர் தேங்குவதற்கு வாய்ப்புள்ள பகுதிகள் என கண்டறியப்பட்டுள்ள அனைத்து இடங்களையும் கள ஆய்வு செய்து அடைப்புகள், ஆக்கிரப்புகள் ஏதேனும் இருப்பின் அவற்றை போர்க்கால அடிப்படையில் சரி செய்திட தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ள வெண்டும் மேலும் கன மழையை எதிர்கொள்ள அனைத்து அலுவலர்களும் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொண்டு தயார் நிலையில் இருக்க வேண்டும்.

பொதுமக்கள் 12.12.2024 மற்றும் 13.12.2024 ஆம் தேதிகளில் தக்க முன்னெச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பொதுமக்களின் வசதிக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகம், வருவாய் கோட்டாட்சியர் மற்று ம் வட்டாட்சியர் அலுவலகங்களில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டுள்ளன.கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது.

பொதுமக்கள் மழை தொடர்பான தகவல்கள். புகார்கள் மற்றும் சேதங்கள் ஏதேனும் இருப்பின் அதன் விபரங்களை கட்டுப்பாட்டு அறை தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம் என மாவட்ட ஆட்சித்தலைவர்.பூங்கொடி, இ.ஆ.ப. தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *