திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் வரதராஜன்பேட்டை தெருவில் மகா மாரியம்மன் ஆலயம் உள்ளது. இவ்வாலயம் தமிழகத்தில் தலை சிறந்த சக்தி தலங்களில் ஒன்றாகும். இவ்வாலயத்தில் உள்ள ஆறு நிரந்தர உண்டியல்கள் திறந்து எண்ணிக்கை பணி திருவாரூர் இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் வி. சொரிமுத்து முன்னிலையில்,ஆலய செயல் அலுவலர் எஸ். ராஜராஜேஸ்வரன், தக்கார்/ஆய்வர் க. மும்மூர்த்தி ஆகியோர் மேற்பார்வையில் நடைபெற்றது. உண்டியல் எண்ணிக்கையில் திருவாரூர் மாவட்ட ஐயப்பா சேவா சமாஜ் சங்கத்தினர், வலங்கைமான் தனியார் பாராமெடிக்கல் காலேஜ் மாணவிகள், வலங்கைமான் அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் ஈடுபட்டனர்.

ஆறு நிரந்தர உண்டியல்கள் மூலம் 17 லட்சத்து 52 ஆயிரத்து 234 ரூபாய் ரொக்கமும், பொன் இனங்கள் 158.200 கிராமும், வெள்ளி இனங்கள் 300.400 கிராமும் பக்தர்களால் காணிக்கையாக கிடைக்கப்பெற்றது. உண்டியல் திறப்பு ஏற்பாடுகளை ஆலய செயல் அலுவலர் எஸ். ராஜராஜேஸ்வரன், தக்கார் / ஆய்வர் க. மும்மூர்த்தி, அலுவலக மேலாளர் தீ. சீனிவாசன் மற்றும் திருக்கோயில் பணியாளர்கள் சிறப்பாக செய்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *