R. கல்யாண முருகன்.
விருத்தாசலம்
விருத்தாசலம் சுற்று வட்டாரப் பகுதிகளில் விடிய விடிய கொட்டி தீர்த்த கனமழை.

கடலூர் மாவட்டம் விருத்தாசலம் சுற்று வட்டார பகுதிகளில் விடிய விடிய கனமழை கொட்டி தீர்த்ததால் தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தேங்கியது. ஏரிகள் குளங்கள் நிரம்பி வழிவதால் விவசாய நிலங்களில் தண்ணீர் சென்று விளைநிலங்கள் பாழாவதாக விவசாயிகள் வேதனை. உளுந்து பயிர்கள் முற்றிலும் சேதம் அடைந்து வேர்கள் அழுகி கருகி உள்ளன. நெற்பயிர்கள் முழுவதும் தண்ணீரில் மூழ்கி இரண்டு மூன்று நாட்களாக தண்ணீர் செல்வதால் விவசாயிகள் கவலை அடைந்து வருகின்றனர். தாழ்வான பகுதிகளில் உள்ள வீடுகளில் தண்ணீர் புகுந்ததால் மக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளனர். விருத்தாசலம் மணிமுத்தாற்றில் நான்காண்டுகளுக்கு மேல் தண்ணீர் வராமல் சாத்தனூர் அணையில் இருந்து தண்ணீர் திறந்து விடப்பட்ட நீர் மணிமுத்தாற்றில் இரு கரையும் தொட்டு செல்வதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.