திண்டுக்கல் மேட்டுப்பட்டி அருள்மிகு ஐயப்பன் கோவில் கும்பாபிஷேக விழா கொட்டும் மழையில் வெகு விமர்சையாக நடைபெற்றது
பரிவார தெய்வங்களான ஸ்ரீ வெற்றி விநாயகர், ஸ்ரீ வெற்றிவேல் முருகன், ஸ்ரீ கருப்பண்ணசாமி, ஸ்ரீ கருப்பாயி அம்மாள், ஸ்ரீ மஞ்சமாதா, ஸ்ரீ நாகராஜா ஆகிய சுவாமிகளுக்கும் கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 11-ம் தேதி முதல் கால பூஜை தொடங்கியது. தொடர்ந்து நான்காம் கால பூஜை ஆக இன்று காலை வேதபாராயணம் நாடி சந்தானம் திராவியா குதி பூர்ணா குதியுடன் நிறைவுற்றது.
புனித தீர்த்தங்கள் அடங்கிய கலசங்களின் புறப்பாடு நடைபெற்றது.
அதனைத் தொடர்ந்து கோபுர விமானங்களில் மற்றும் சுவாமி விக்கிரங்களுக்கு சிவாச்சாரியார்கள் புனித நீர் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் கலசங்களுக்கு தீப தூப ஆராதனை காண்பிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து புனித நீர் பக்தர்கள் மீது தெளிக்கப்பட்டது.