தஞ்சாவூர். டிச.13. தஞ்சாவூர் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் இருக்கும் தனியார் திருமண அரங்கத்தில் நடைப்பெற்ற,

தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, கடலூர் மாவட்டங்களை உள்ளடக்கிய, தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆய்வுக் மற்றும் ஆலோசனை கூட்டம் தஞ்சை மத்திய மாவட்ட திமுக செயலாளர் துரை. சந்திரசேகரன் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் அமைச்சர்கள் அன்பில் மகேஷ் பொய்யாமொழி,  டிஆர்பி ராஜா பங்கேற்று பல்வேறு ஆலோசனைகளை வழங்கினர்.

தஞ்சை மண்டல திமுக தகவல் தொழில்நுட்ப அணியின் ஆலோசனை கூட்டத்தில் அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா பேசும்போது:-
தேர்தல் பணியை துவங்கி விட்டோம் நாடாளுமன்ற தேர்தலில் 40-க்கு-40 என எவ்வாறு மக்களிடம் உறுதியாக எடுத்துச் சென்றோமோ அதை விட உறுதியாக 234-தொகுதிகளும் திமுக கூட்டணி வெற்றி பெற சட்டமன்றத் தேர்தலில் பணியாற்றி 2026-ல் மீண்டும் 2-வது முறை தலைவர் மு.க.ஸ்டாலினை முதலமைச்சராக ஆட்சி கட்டிலில் அமர வைப்போம். திமுக தொழில்நுட்ப அணியில் லட்சக்கணக்கான இளைஞர்களை சேர்த்து தமிழக மக்களுக்கு பல்வேறு நலத்திட்டங்கள் தொடர்வதற்கு உழைப்போம்
என்று பேசினார்.
பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி
கூறியதாவது, எல்லோருக்கும் எல்லாம் என்பதுதான் திராவிட ஆட்சியின் நோக்கம், சென்னையில் சமீபத்தில் எதிர்கொண்ட மழை வெள்ளத்திற்கு முதலமைச்சரும், துணை முதலமைச்சரும் கடுமையாக உழைத்து ஆற்றிய பணிகளை அனைவரும் அறிவார்கள், துணை முதலமைச்சராக பொறுப்பேற்ற உதயநிதி ஸ்டாலின் தனது நிர்வாக திறமையின் காரணமாக பல ஆண்டுகளாக பட்டா கிடைக்காமல் இருந்த 2-லட்சத்திற்கு மேற்பட்டவர்களுக்கு பட்டாக்களை வழங்கி நிர்வாகத்திறமையை வெளிப்படுத்தியுள்ளார். நலத்திட்டங்கள் கொடுப்பது போல் செல்ஃபி எடுத்துக் கொண்டு செல்லும் நடிகர் அல்ல என்பதனை திமுக தொழில்நுட்ப அணியினர் இன்னும் தீவிரமாக மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும் என்று வலியுறுத்தினார்.

  இக்கூட்டத்தில் உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினரும், முன்னாள் மத்திய நிதித்துறை இணையமைச்சருமான எஸ்.எஸ்.பழநிமாணிக்கம், நாகை மாவட்ட திமுக செயலாளர் கௌதமன்,  சட்டமன்ற உறுப்பினர் உறுப்பினர்கள் டி.கே.ஜி. நீலமேகம்,  அண்ணாதுரை,  அசோக்குமார், மேயர் சண்.இராமநாதன்,  துணை மேயர் அஞ்சுகம்பூபதி,  மாவட்ட ஊராட்சி குழு தலைவர் உஷா புண்ணியமூர்த்தி. தகவல் தொழில் நுட்ப அணி மண்டல செயலாளர் ஸ்ரீதர்,  மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ராஜா. சீனிவாசன், முத்து கதிர்வேலன் உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *