அமமுக கழக பொதுச் செயலாளரின் 62-வது பிறந்தநாள் விழாவை வெகு விமர்சையாக கொண்டாட்டம்..!
தருமபுரி மாவட்டம்
அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் கழகப் பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் அவர்களின் 62-வது பிறந்தநாளை முன்னிட்டு தருமபுரி மாவட்டம் இலக்கியம்பட்டி அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் ஊராட்சி கழக செயலாளர் காளியப்பன் தலைமையில் அமமுக கழக பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன் பிறந்தநாளை கொண்டாடும் விதமாக அவருக்கு இலக்கியம்பட்டி சாலை மாரியம்மன் கோவிலில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட செயலாளர் டி.கே. ராஜேந்திரன் சிறப்பு அர்ச்சனியை செய்வதற்கு வருகை புரிந்தார் அப்போது அவருக்கு கோவில் பூசாரி படிவட்டம் கட்டி வரவேற்றார். பின்னர் பட்டாசுகள் வெடித்து பூஜை செய்து முடித்துவிட்டு அருகிலுள்ள எம்.ஜி.ஆர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்திவிட்டு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கினார். இதில் ஒன்றிய கழகச் செயலாளர் பாஸ்கர், மாவட்டத் துணைத் தலைவர் நாகப்பன், நகர கழக செயலாளர் பார்த்திபன், மணிகண்டன், அன்பு, பூவரசன், பழனிசாமி, கோவிந்தராஜ், மணி மற்றும் மாநில,மாவட்ட, நகர, ஒன்றிய, கிளை நிர்வாகிகள், பொதுமக்கள் என பலர் கலந்து கொண்டனர்.