செய்தியாளர்
ச.முருகவேலு டைம்ஸ் ஆப் தமிழ்நாடு
புதுச்சேரி
திருவண்ணாமலை தீபம் காண தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரியில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். அப்போது விழுப்புரம் மாவட்டம் கெடார்பகுதி சேர்ந்த லட்சுமி நாராயணன் என்ற பக்தர் அவ்வழியே வரும் பக்தர்களுக்கு தொடர்ந்து பத்த ஆண்டுகளாக அன்னதானம் வழங்கி வருகிறார்.
அதன்படி இந்த ஆண்டும் சிறப்பாக அன்னதானம் வழங்கு விழா நடந்தது. முன்னதாக கெடார் திருவண்ணாமலை சாலையில் வீரமூர் வீ. புதுப்பாளையம் என்ற பகுதியில் அருள்மிகு சிவன் பார்வதி உருவப்படம் பெரிய அளவில் வைக்கப்பட்டு சிறப்பு பூஜைகள்நடந்தது. இந்நிகழ்ச்சியில் ரவி, குணா, சங்கர் உட்பட திரளாக அப்பகுதி மக்கள் கலந்து கொண்டனர். பின்னர் திருவண்ணாமலை மகாதீபம் காண வந்த பக்தர்களுக்கு டேபிள் போட்டு வாழை இலையில் சாப்பாடு போடப்பட்டது. நடைபயணமாகவும், இருசக்கர வாகனங்கள் மற்றும் கார்களில் வந்த அனைத்து பக்தர்களும் வயிறார உண்டு பசியாறி சென்றது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து விழுப்புரம் மாவட்டம் கெடார் வீராமூர் வி புதுப்பாளையத்தைச் சேர்ந்த லட்சுமி நாராயணன் கூறுவதாவது... நான் இந்த இடத்தில் பழைய இரும்பு பொருட்கள் கடை நடத்தி வருகிறேன் கடந்த பத்து ஆண்டுகளுக்கு முன்னர் திருவண்ணாமலை மகாதீபம் காண பக்தர் ஒருவர் மிகவும் சோர்வாக நடந்து வருவதைப்பார்த்து, அவரிடம் விசாரித்ததில் அவர்பசியோடு இருப்பதை அறிந்தேன். அதுமுதல் ஒவ்வோர் ஆண்டும் இவ்வழியே திருவண்ணாமலை மகாதீபம் காணவரும் பக்தர்களுக்கு உணவு வழங்கவேண்டும் என்று முடிவுசெய்து சிவன்அருளோடு இத்திருத்தொண்டை செய்துவருவதாக கூறினார். மேலும் அவரது நண்பர்களான ரவி, குணா, சங்கர் ஆகியோரும்இணைந்து இப்பணியை செய்வதாக தெரிவித்தார்.