சிறப்பு விருந்தினராக தமிழக சிறுபான்மை துறை ஆணைய உறுப்பினர் ஹாஜி முகம்மது ரஃபி பங்கேற்பு
கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கிறிஸ்துமஸ் விழாவில்,பள்ளி மாணவிகள் இணைந்து உற்சாகமாக கிறிஸ்துவ பாடல்களை பாடி கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர்…கிறிஸ்துமஸ் மற்றும் புத்தாண்டு விழாவிற்கு இன்னும் சில தினங்களே உள்ள நிலையில்,கோவை கோட்டைமேடு பகுதியில் உள்ள புனித ஆக்னஸ் நடுநிலை பள்ளியில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது..
பள்ளியின் தலைமையாசிரியை சகோதரி நிர்மலா ஒருங்கிணைப்பில் நடைபெற்ற இதில்,சிறப்பு விருந்தினர்களாக தமிழக சிறுபான்மை ஆணைய உறுப்பினர் முகம்மது ரஃபி மற்றும் ஆயர் ஜார்ஜ் தனசேகர், ஆகியோர் கலந்து கொண்டனர்..
முன்னதாக ஆசிரியைகள் மற்றும் மாணவ, மாணவியர் கிறிஸ்துவின் புகழ் பாடும் பாடல்கள் பாடினர்.
இதில் கிறிஸ்து பிறப்பு முதல் அவரது வாழ்க்கையை நாடகமாக மாணவிகள் தத்ரூபதாக நடித்து காட்டினர்.
மேலும் நடன நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.
தொடர்ந்து கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட மாணவிகள் ஜிங்கில் பெல் பாடல்களை பாட பள்ளி மாணவிகளும் உற்சாகமாக உடன் பாடி ஆரவாரம் செய்தனர்..
இதனை தொடர்ந்து பள்ளி ஆசிரியைகளும் கிறிஸ்துமஸ் தாத்தா வேடமிட்ட மாணவியர்களுடன் இணைந்து உற்சாக நடனமாடினர்..
அனைத்து தரப்பினரும் பயிலும் பள்ளியில் பயிலும் நடைபெற்ற இந்த கிறிஸ்துமஸ் விழாவில் சமத்துவத்தை போற்றும் வகையில் மாணவிகள் இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை உற்சாகமாக கொண்டாடினர்…
விழாவில் பல்சமய நல்லுறவு இயக்க நிர்வாகிகள் அபுதாகீர்,கோவை தல்ஹா,ஜீவசாந்தி சலீம்,ஹக் ஹரி உட்பட பள்ளி ஆசிரியைகள்,
மாணவிகள் என பலர் கலந்து கொண்டனர்…