தமிழக அரசின் கோரிக்கையை ஏற்று முல்லைப் பெரியாறு அணை பகுதிக்கு கட்டுமான பொருட்கள் கொண்டு செல்ல அனுமதி தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தகவல் தேனி மாவட்டம் உத்தமபாளையம் தாலுகா முல்லைப் பெரியாறு அணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதற்காக வாகனங்கள் மூலம் கட்டுமான பொருட்கள் கொண்டு செல்வதற்கு கேரள வனத்துறையிடம் முறையாக அனுமதி பெறப்பட்டுள்ளது தேனி திண்டுக்கல் மதுரை ராமநாதபுரம் சிவகங்கை ஆகிய ஐந்து மாவட்டங்களின் குடிநீர் மற்றும் பாசன நீர் ஆதாரமாக விலகும் முல்லைப் பெரியாறு அணை தமிழக கேரள எல்லையில் அமைந்துள்ளது தமிழக அரசு பொதுப்பணி துறையின் சார்பில் அணைப்பகுதியில் ஆண்டுதோறும் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுவது வழக்கம் இதன்படி பொதுப்பணித்துறையில் சார்பில் கடந்த டிசம்பர் 4ஆம் தேதி தேனியில் இருந்து 2 தனியார் லாரிகளில் தளவாடப் பொருட்களை ஏற்றிக்கொண்டு கேரள மாநிலம் இடுக்கி மாவட்டம் பீர்மேடு தாலுகா வல்லக்கடவு வழியாக முல்லைப் பெரியாறு அணைக்கு கொண்டு சென்றனர் சோதனைச் சாவடியில் முல்லைப் பெரியாறு அணைக்கு தளவாடப் பொருட்கள் கொண்டு செல்ல கேரளா வனத்துறையிடம் முறையாக அனுமதி பெற்ற பின்னரே அனுமதிக்கப்படும் என கேரள வனத்துறை அதிகாரிகள் தளவாடப் பொருட்களை கொண்டு செல்ல அனுமதி மறுத்தனர் இந்த நிலையில் தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் தமிழக அரசின் கூடுதல் தலைமைச் செயலாளர் நீர்வளத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு கேரளா அரசின் மூலம் வல்லக்கடவு சோதனைச் சாவடி மற்றும் தேக்கடி படகு இறங்குதளம் வழியாக முல்லைப் பெரியாறு அணையின் பராமரிப்பு பணிக்கு தளவாட பொருட்கள் கட்டுமான பொருட்களை கொண்டு செல்ல அனுமதி பெறப்பட்டுள்ளது என்று தேனி மாவட்ட ஆட்சித் தலைவர் ஆர் வி ஷஜீவனா தகவல் தெரிவித்துள்ளார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *