எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு ஊராட்சி அல்லிவிளாகம் கிராமத்தில் வீடுகளை சூழ்ந்த மழை நீர் வடிகாலை தூர்வார கோரிக்கை

வங்கக்கடலில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை காரணமாக கடலோர டெல்டா மாவட்டங்களில் அதிக அளவு கன மழை பெய்யும் என சென்னை வானிலை மையம் அறிவித்திருந்த நிலையில் மயிலாடுதுறை மாவட்டம் சுற்றுவட்டார பகுதியில் கடந்த மூன்று நாட்களாக விட்டுவிட்டு பரவலாக கனமழை பெய்து வருகிறது.இந்நிலையில் சீர்காழி அடுத்த செம்பதனிருப்பு ஊராட்சிக்கு உட்பட்ட அல்லிவிளாகம் மாரியம்மன் கோவில் தெரு, கீழத்தெரு பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட வீடுகளில் மழைநீர் சூழ்ந்துள்ளது. பிரதான வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றப்படாமல் உள்ளதால் கடந்த மூன்று நாளாக பெய்த கனமழையின் காரணமாக வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளதால் பொதுமக்கள் அவதி அடைந்துள்ளனர் . மேலும் பலமுறை ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்திடம் மனு அளித்தும் வடிகால் ஆக்கிரமிப்பு அகற்றாமல் உள்ளதால் மழைக்காலங்களில் பெருதளவு பாதிக்கப்படுவதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர். மேலும் ஆக்கிரமிப்பு அகற்றி வடிகாலை தூர்வாரி வருங்காலங்களில் மழை நீரால் பாதிப்பு ஏற்படாதவாறு தீர்வு காண வேண்டும் என அப்பகுதி மக்கள் ஊராட்சி மற்றும் மாவட்ட நிர்வாகத்துக்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.