பருவமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட ஆட்சியர்நேரில் பார்வையிட்டு ஆய்வு..
வடகிழக்கு பருவமழையின் காரணமாக திருவாரூர் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருவாரூர் மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
கனமழையின் காரணமாக, நன்னிலம் வட்டம், சிறுபுலியூர் ஊராட்சி பூரதாழ்வார் குடி குக்கிராமத்தில் வயலிருந்து நீர் வெளியேறி அக்கிராமத்தில் நீர் சூழ்ந்துள்ளதனை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு அப்பகுதிகளில் வசித்துவரும் 30 குடும்பங்களை பாவட்டக்குடி பள்ளி முகாமிற்கு அனுப்பி வைத்தார் முகாம்களில் தங்கவைக்கப்பட்டுள்ள மக்களுக்கு தேவையான உணவு, குடிநீர் போன்றவற்றை உடனடியாக ஏற்பாடு செய்து தரக்கோரி உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.
தொடர்ந்து, கொல்லாபுரம் ஊராட்சி ஜீவாத்தெரு பகுதியில் மழைநீர் சூழ்ந்துள்ளதால் அப்பகுதியில் வசித்துவரும் 15 குடும்பங்களை அருகிலுள்ள அரசு உயர்நிலைப்பள்ளி முகாமில் தங்க வைக்கப்பட்டுள்ளதனையும் கொத்தவாசல் ஊராட்சி அருகிலுள்ள திருமலைராஜன் ஆற்றில் நடைபெற்றுவரும் முன்னேற்பாடு பணிகளை மாவட்ட ஆட்சியர் தி.சாருஸ்ரீ நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
ஆய்வில் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் புஹாரி நன்னிலம் வட்டாட்சியர் ரஷியாபேகம் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் உள்ளிட்ட அரசு அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உடனிருந்தனர்.