தினேஷ்குமார் க செய்தியாளர் திருப்பத்தூர் மாவட்டம்
நெருங்கி வரும் கிறிஸ்துமஸ் காரணமாக ஏலகிரி மலையில் தமிழகத்திலே முதல் முறையாக 70 அடி அளவிலான கிறிஸ்மஸ் ட்ரீ லைட்டிங் திருவிழா! திருவிழாவை காண வந்த நடிகர் சந்தானம்!

திருப்பத்தூர் மாவட்டம், ஏலகிரிமலை அடுத்த பள்ளக்கனியூர் பகுதியில் உள்ள தனியார் சொகுசு ஓட்டலில் கிறிஸ்மஸ் பண்டிகையை முன்னிட்டு தமிழகத்திலே முதல்முறையாக 70 அடி அளவிலான கிறிஸ்மஸ் லைட்டிங் திருவிழா நடைபெற்றது.
இதனை கேள்விப்பட்ட நடிகர் சந்தானம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கிறிஸ்மஸ் மரத்தில் பொருத்தப்பட்டிருந்த லைட்டிங்கின் ஸ்விட்சை அழுத்தி மின்விளக்குகளை எரியவிட்டார்.
இதன் காரணமாக 70 அடி அளவிலான இந்த கிறிஸ்மஸ் மரம் மின்விளக்குகளால் ஜொலித்தது.
நிகழ்ச்சியின் முடிவில் செய்தியாளர்களை சந்தித்து ஹோட்டல் பொது மேலாளர் சசிகுமார் கூறுகையில்
தமிழகத்தில் முதல்முறையாக கிறிஸ்மஸை வரவேற்கும் விதமாக ஏலகிரி மலையில் 70 அடி அளவிலான கிறிஸ்மஸ் ஸ்ட்ரீட் லைட்டிங் சேர்மோனி மகிழ்ச்சியை நடத்தி இருக்கிறோம்
மேலும் ஏலகிரி மலையில் அனைத்து விஷயங்களும் உள்ளது இதனை பொதுமக்கள் அனைவரும் அறிந்து கொள்ள வேண்டும் மேலும் ஏலகிரி மலைக்கு சுற்றுலா பயணிகள் அதிகமாக வர வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
பேட்டி; சசிகுமார் ஹோட்டல் மேனேஜர்