திண்டுக்கல் மாவட்டத்தில், வடகிழக்குப் பருவ மழை முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆய்வு பணிகள்,
திண்டுக்கல் மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் தூர்வாரும் பணிகள் மேற்கொள்ளப்பட்ட மழைநீர் வடிகால்வாய்களை தமிழ்நாடு மாநில வாணிப கழகம், மேலாண்மை இயக்குநர் / திண்டுக்கல் மாவட்ட கண்காணிப்பு அலுவலர் விசாகன், திண்டுக்கல் மாநகராட்சி மேயர் இளமதி ஜோதிபிரகாஷ் முன்னிலையில் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார்.
இந்த ஆய்வின்போது, திண்டுக்கல் வருவாய் கோட்டாட்சியர் சக்திவேல், மாநகராட்சி ஆணையாளர் ரவிச்சந்திரன், துணை மேயர் ராஜப்பா, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர்(பொது) கோட்டைக்குமார் மற்றும் துறை அலுவலர்கள் பலர் உடனிருந்தனர்.