திண்டுக்கல் மாவட்டம் பழனி பகுதிகளில் கடந்த 2 மாதங்களாக பெய்த மழை காரணமாக அணைகள் அனைத்தும் நிரம்பின.
பல அணைகளும் திறக்கப்பட்டு குளங்கள் நிரம்பியுள்ளன. இந்த நிலையில், தற்போது பெய்து வரும் மழையால் மீண்டும் அணைகளுக்கு நீா்வரத்து அதிகரித்துள்ளன.இதனால், அணைகளுக்கு வரும் நீா் முழுவதுமாக வெளியேற்றப்படுகிறது.
பழனிவட்டம் மானூர் நரிக்கல்பட்டி கோரிக்கடவு கீரனூர் பகுதிமக்கள் மற்றும் அலங்கியம் சார்ந்த மக்களும் பாதுகாப்பாக இருந்து கொள்ளுமாறு பொதுப்பணித்துறை சார்பாக கேட்டுக்கொள்ளப்படுகிறது.