காஞ்சிபுரம் மாநகராட்சி பூக்கடைச்சத்திரம் PTVS உயர்நிலைப்பள்ளியில் காஞ்சிபுரம் மாவட்டம் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்(TNTJ), காஞ்சிபுரம் கிளை சார்பில் அரசு தலைமை பொது மருத்துவமனையுடன் இணைந்து 38வது இரத்ததான முகாம் நடைபெற்றது.


இதில் TNTJ கிளை தலைவர் சாகுல் ஹமீத் தலைமையில் நடைபெற்ற இந்த இரத்த தான முகாமில் 200க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சாதி,மத பேதமின்றி கலந்து கொண்டு 82 நபர்கள் இரத்ததானம் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில்
TNTJ காஞ்சிபுரம் மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீன், துணை செயலாளர் அன்சாரி, ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
மேலும் கிளை செயலாளர் யூசூஃப், பொருளாளர் பாசில், துணை செயலாளர் அப்துல்லாஹ் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர்.

இதனை தொடர்ந்து இரத்த வங்கி அலுவலர் தாமரை நங்கை செய்தியாளர்களை சந்தித்த போது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் காஞ்சி மாவட்ட மருத்துவரணி செயலாளர் சர்புதீன், தமிழகத்தில் அதிகமான இரத்ததானங்களை நடத்தி இந்த 2024 ஆண்டில் மட்டும் 1312 யூனிட்கள் சாதி மத பேதமின்றி அனைத்து சமுதாய மக்களுக்கு அவசர காலங்களில் வழங்கி உள்ளதாக தெரிவித்தனர்.

மேலும் இது போன்ற இரத்ததான முகாம்கள் அதிகமாக நடத்துவதற்கு காஞ்சிபுரம் அரசு மருத்துவமனையில் நடமாடும் இரத்ததான வாகனம் அமைக்கபெற்றால் அதிகமான முகாம்கள் நடத்த முடியும் என்றும்
காஞ்சிபுரம் அரசு மருத்துவமணையை தரம் உயர்த்த கோரியும், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பாக பல வருடங்களாக கோரிக்கை வைக்கப்பட்டு வருவதாக கூறினர்.

இந்த இரத்ததான முகாமிற்கு சிறப்பு அழைப்பாளர்களாக காஞ்சிபுரம் மாநாகராட்சி 1 வது வார்டு கவுன்சிலர் அஸ்மா பேகம் சாகுல் ஹமீது, 5 வது வார்டு கவுன்சிலர் இலக்கியா சுகுமார் ஆகியோர் கலந்து கொண்டு இரத்தக்கொடையாளர்களுக்கு சான்றிதழ் மற்றும் பழங்களை வழங்கினார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *