காஞ்சிபுரம்
காஞ்சிபுரம் மாநகராட்சி நத்தப்பேட்டை ரயில் நிலையம் அருகில் ஷெரின் கிஷேத்ரா எனும் பெயரில் முதியோர் குடியிருப்பு பகுதி அமைக்கப்பட்டு சிறப்புடன் செயல்பட்டு வருகிறது.
இங்கு வெளிநாட்டில் பணி செய்து கொண்டு வசிப்பவர்களின் முதியோர்களான பெற்றோர்கள் வீடு வாங்கி அனைத்து வசதிகளுடன் அமைதியான வாழ்க்கை வாழ்ந்து வருகிறார்கள்.
இவர்களுக்குத் தேவையான உணவு வசதி, மருத்துவ வசதி, பாதுகாப்பு வசதி, ஆகியவைகளை உள்ளடக்கிய சிறந்த முதியோர் குடியிருப்பு பகுதியாக 400 வீடுகளுடன் விளங்கி வருகிறது.
ஷெரின் கிஷேத்ரா குடியிருப்பு பகுதியில் தற்பொழுது மேலும் முதியோர்களுக்கான அனைத்து நவீன வசதிகளுடன் கூடிய 224 வீடுகள் கட்டும் பணிக்காக பூமி பூஜை இன்று நடைபெற்றது.
பூமி பூஜை விழாவில் பங்குதாரர்களான முத்தியால்பேட்டை ஆர்வி. ரஞ்சித் குமார், ட்ரீம் லேண்ட் புரமோட்டர்ஸ் கிருஷ்ணசாமி,பிரபு ஆகியோர் கலந்து கொண்டு முதியோர் குடியிருப்புகள் கட்டும் பணிக்கு பூமி பூஜை செய்து பணிகளை துவக்கி வைத்தனர்.
பூமி பூஜை விழாவில் காஞ்சிபுரம் நகரின் முக்கிய பிரமுகர்களும், முதியோர் குடியிருப்பு வாசிகளும், புதிய வீடு வாங்க எண்ணிய வாடிக்கையாளர்களும் கலந்து கொண்டனர்.
அனைத்து வசதிகளுடன் கட்டப்படும் இந்த முதியோர் குடியிருப்பு பகுதியில் வீடுகளின் விலை 65 லட்சம் ரூபாய் என்றும்,இங்கு 50 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு மட்டுமே வீடு விற்பனை செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.