முன்னாள் தமிழக காங்கிரஸ் கமிட்டியின் தலைவரும், முன்னாள் மத்திய அமைச்சருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மறைவிற்கு அமைதிப் பேரணி ராஜபாளையம் சாந்தி தியேட்டர் முன்பு துவங்கியது. நிகழ்ச்சியை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஏ. ரெங்கசாமி தலைமை தாங்கினார், ராஜபாளையம் சட்ட மன்ற உறுப்பினர் தங்கபாண்டியன், மாநில சீர்மரபினர் வாரிய தணைத் தலைவர் ராசா அருண்மொழி, தி.மு.க நகர செயலாளர்கள் ராமமூர்த்தி, மணிகண்ட ராஜா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலாளர் சுப்பிரமணியன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் நகர செயலளர் விஜயன், மதிமுக நகர செயலாளர் மதியழகன், விசிக தொகுதி செயலாளர் சரவணன், அதிமுக சார்பில் யோக சேகரன் மற்றும் காங்கிரஸ் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் ஆர். சங்கர் கணேஷ் உள்பட பலர் செய்திருந்தார். முடிவில் பேரணி ராஜபாளையம் ஜவஹர் மைதானத்திற்கு சென்றடைந்து அங்கு வைக்கப்பட்டிருந்த
ஈ. வி. கே. எஸ். இளங்கோவன் படத்திற்கு மாலை மற்றும் மலர் தூவி அஞ்சலி செலுத்தினார்கள்.
