எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி நாம் தமிழர் கட்சி சட்டமன்ற பொறுப்பாளர்கள் கூண்டோடு ஆஇஅதிமுகவில் இணைந்தனர்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழியில் நாம் தமிழர் கட்சி சட்டமன்ற செயலாளர் ஜவகர் நெடுஞ்செழியன் தலைமையில் நகர செயலாளர் நகர பொறுப்பாளர் மேற்கு ஒன்றிய செயலாளர் உட்பட 30க்கும் மேற்பட்டோர் நாம் தமிழர் கட்சியின் செயல்பாடுகளில் அதிருப்தி இருப்பதாக கூறி அக்கட்சியிலிருந்து விலகி அதிமுகவின் மயிலாடுதுறை மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் மாநில அம்மா பேரவை துணைச் செயலாளர் மார்கோனி முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர். மாவட்ட கழக செயலாளர் எஸ் பவுன்ராஜ் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வந்த பொறுப்பாளர்களுக்கு அதிமுக துண்டு அணிவித்து வரவேற்றார். தொடர்ந்து அதிமுகவில் சிறப்பாக செயல்பட வேண்டும் என கேட்டுக்கொண்டார் இந்நிகழ்வில் அதிமுக நகர்மன்ற உறுப்பினர்கள் மற்றும் பொறுப்பாளர்கள் கலந்து கொண்டனர்.