எஸ் செல்வகுமார் செய்தியாளர் சீர்காழி
சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் தேசிய சித்தா தினத்தை கொண்டாடப்பட்டது, மூலிகைச் செடிகளின் பயன்கள் குறித்து காட்சிப்படுத்திய சித்த மருத்துவர்கள்.

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி அரசு தலைமை மருத்துவமனையில் செயல்பட்டு வரும் சித்தா மருத்துவ பிரிவில் 8 வது சித்த மருத்துவ தினம், அகத்தியரின் பிறந்த நட்சத்திர நாளான 2024 டிசம்பர் 19ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சித்த வைத்தியத்தின் தந்தை என போற்றப்படும் சித்தர் அகத்தியரின் பிறந்த நாளை ஒட்டி ஆண்டுதோறும் ஆயுஷ் அமைச்சகம் சார்பில் தேசிய சித்தா தினம் கொண்டாடப்படுகிறது.அதே போல நிகழாண்டும் கொண்டாடப்பட்டது,
கொரோனாவால் கடுமையாகப் பாதிக்கப்பட்டவர்களுக்கு அரசு மருத்துவமனைகள் சிகிச்சை அளித்துக் கொண்டிருந்த வேளையில், சிகிச்சையில் லேசான பாதிப்பு உள்ளவர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவும், முன்களத்தில் பணியாற்றிய அலுவலர்களுக்கு நோய் எதிர்ப்பாற்றலை உருவாக்கவும் ஆயுஷ் மருத்துவ நடைமுறைகள் பெரிதும் உதவியாக இருந்துள்ளது என தெரிவித்தனர் மேலும் கை வைத்தியங்களை அதிக அளவில் பயன்படுத்தவும் இயற்கை வளங்களை பயன்படுத்தி ஆரோக்கியத்தை காக்கவும் வலியுறுத்தப்பட்டது மேலும் சித்த மருத்துவ வழகத்தில் அமைந்துள்ள மூலிகைச் செடிகளின் பயன்களையும்,அதனை எவ்வாறு பயன்படுத்துவது காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இதில் சித்த மருத்துவ மாவட்ட அலுவலர் ஜோதி சாந்தகுமாரி,சீர்காழி அரசு தலைமை மருத்துவர் அருண் ராஜ்குமார், உதவி மருத்துவர்கள் சத்தியபாமா, யோகா, மேகலா உள்ளிட்ட கலந்து கொண்டனர்.