தருமபுரி
ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் புதியதாக பேருந்து நிலையம் மேற்கூரை அமைப்பதற்கு பூமி பூஜை செய்து தொடங்கி வைத்தார் அதிமுக பாப்பிரெட்டிப்பட்டி எம்.எல்.ஏ கோவிந்தசாமி
தருமபுரி மாவட்டம் பொ.மல்லாபுரம் பேருந்து நிலையத்திற்கு சட்டமன்ற உறுப்பினர் மேம்பாட்டு நிதியிலிருந்து ரூ 50 லட்சம் மதிப்பீட்டில் பேருந்து நிலையத்திற்கு புதியதாக மேற்கூரை அமைக்கும் பணிக்கு பொம்மிடி நகர செயலாளர் ராஜா, ஒன்றிய செயலாளர் சேகர் ஏற்பாட்டில் பாப்பிரெட்டிப்பட்டி அதிமுக எம்.எல்.ஏ கோவிந்தசாமி பூமி பூஜை செய்து பணியினை தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் பொம்மிடி ஊராட்சி மன்ற தலைவர் சி.எம்.ஆர் முருகன்,அதிமுக கட்சி நிர்வாகிகள், கழகத் தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.