அரியலூரில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பின் அரியலூர் மாவட்ட நிர்வாகிகள் சார்பில் 9 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஒரு நாள் அடையாள தற்செயல் விடுப்பு போராட்டம் நடத்தப்பட்டது.
களப்பணியாளர்
களின் பணி சுமையை குறைத்திட வேண்டும், தரமிறக்கப்பட்ட குறுவட்ட அளவர் பதவியை மீண்டும் வழங்கிட வேண்டும்,ஏ டி ஓ எஸ் ன் அதிகார பறிப்பை உடனேகைவிட வேண்டும்,சிறப்பு திட்ட மனுக்களுக்கு கூடுதல் கால அவகாசம் வழங்கிட வேண்டும், நில எடுப்பு திட்ட பணிகளில் பதவி உயர்வு வழங்கிட வேண்டும், பொது மாறுதலில் அரசாணை எண் 10 ஐ உறுதிப்படுத்திட வேண்டும் உள்ளிட்ட 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர் ஒன்றிப்பின் மாநில மையத்தின் முடிவின்படி இரண்டாம் கட்ட போராட்டமாக அரியலூர் மாவட்ட ஒன்றிப்பு சார்பில் அனைவரும் அலுவலக த்திற்கு ஒரு நாள் அடையாளத் தற்செயல் விடுப்பு எடுத்து நேற்று போராட்டம்நடத்தினர் .
முன்னதாக, அரியலூர் வட்டாட்சியர் அலுவலகம் முன்பு 9அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு சார்பில் நடத்தப்பட்ட கோரிக்கை முழங்க ஆர்ப்பாட்டத்திற்கு, ஒன்றிப்பின் அரியலூர் மாவட்ட தலைவர் அ. ராஜ்குமார் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு
அரியலூர் மாவட்ட செயலாளர் ஏ. அடைக்கலப்பிரவீன், உடையார் பாளையம் கோட்ட தலைவர் சங்கர் சுரேஷ், அரியலூர் கோட்டை தலைவர் நா சுதாகர், மாவட்ட பிரச்சார இயக்கத் தலைவர் சாந்திப்பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செய லாளர் ஷேக் தாவூத் சிறப்பு அழைப்பாளராக கோரிக்கை முழக்க போராட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
போராட்டத்தின் முடிவில் தமிழ்நாடு நில அளவை அலுவலர்கள் ஒன்றிப்பு அரியலூர் மாவட்ட துணைத்தலைவர் கி சின்னதுரை நன்றி கூறினார் .