அம்பேத்கரை இழிவாக பேசிய மத்திய அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து அரியலூர் மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில், அரியலூர் ரயில் நிலையத்தில் போராட்டம் நடைபெற்றது. அரியலூர் மேற்கு மாவட்ட செயலாளர் அங்கனூர் சிவா தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில், விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்தவர்கள் திரளாக கலந்து கொண்டனர். ரயில் நிலையத்தில் அப்போது வந்த ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட முற்பட்டபோது பாதுகாப்பு பணியில் இருந்த ரெயில்வே போலீசாரும், அரியலூர் போலீசாரும் சேர்ந்து அவர்களை தடுத்து நிறுத்தினர். பின்னர் அவர்கள் உள்துறை அமைச்சர் அமித்ஷாவிற்கு எதிராக கண்டன கோஷங்களை எழுப்பியவாறு சென்றனர். இதையடுத்து அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாக விடுதலை சிறுத்தைகள் கட்சியை சேர்ந்த மொத்தம் 22 பேரை போலீசார் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.