விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் சாஸ்தா கோயிலில் முப்பெரும் விழா நடைபெற்றது.

ராஜபாளையம் முகில்வண்ணம் பிள்ளை தெருவில் அமைந்துள்ள மிகப் பழமையான ஸ்ரீ சடைஉடையார் சாஸ்தா கோயிலில் ஞானசாஸ்தா ஐயப்ப பக்தர்களின் 23– வது ஆண்டு விளக்கு பூஜை , ஐயப்பன் கன்னி பூஜை, அன்னதான விழா நடைபெற்றது. மூலவர் சடை உடையார் சாஸ்தா, பூர்ணா, புன்னைவனத்தாய் மற்றும் பரிவார தெய்வங்களுக்கு சிறப்பு பூஜைகள் மூன்று நாட்களாக நடைபெற்றது.

முதல் நாள் வெள்ளிக்கிழமை மாலை நல்ல மழை பொழியவும், விவசாயம் செழிக்கவும், உலக நன்மை வேண்டியும் 108 திருவிளக்கு பூஜை நடைபெற்றது. இந்த பூஜையில் கலந்து கொண்ட பெண்கள் கீர்த்தனைகள் பாடி சாமி தரிசனம் செய்தனர்.

இரண்டாம் நாள் சனிக்கிழமை இரவு அனைத்து ஐயப்ப பக்தர்களின் கன்னி பூஜையும், நாம சங்கீர்த்தன பஜனையும், மூன்றாம் நாள் ஞாயிற்றுக்கிழமை மதியம் சுவாமிக்கு சிறப்பு ஆலங்கராம் அன்னதானம் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் ராஜபாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி மக்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீசடைஉடையார் சாஸ்தா திருக்கோவில் ஐயப்ப பக்தர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *