திருவாரூர் மாவட்டம் வலங்கைமான் கடைவீதி ராமர் கோவில் பேருந்து நிறுத்தம் அருகில், தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் சார்பாக உள்துறை அமைச்சர் அமித்ஷாவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டம் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் வலங்கைமான் நகரத் தலைவர் அகமது மைதீன் தலைமையில் நடைபெற்றது. வலங்கைமான் நகர திமுக செயலாளர் பா. சிவனேசன்,வலங்கைமான் காங்கிரஸ் முன்னால் நகரத் தலைவர் ஆர்.கலியமூர்த்தி, வலங்கைமான் வட்டார சேவா தளம் தலைவர் கே. என்.ஆர். இளங்கோவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினர் என். ராதா, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலங்கைமான் ஒன்றிய செயலாளர் டி. சண்முகம் ஆகியோர் முன்னிலையில் தமிழ்நாடு காங்கிரஸ் தொழிலாளர் யூனியன் திருவாரூர் மாவட்ட தலைவர் வலங்கைமான் குலாம் மைதீன் கண்டன உரையாற்றினார்.
சட்ட மாமேதை அம்பேத்கர் மீது அவதூறு பேசிய உள்துறை அமைச்சர் அமித் ஷாவே பதவி விலகு, தலைவர் ராகுல் காந்தி மீது பொய் வழக்கு போடாதே போன்ற கோஷங்கள் அனைவராலும் எழுப்பப்பட்டது. ஆர்ப்பாட்டத்தில் சட்ட மாமேதை அம்பேத்கர், முன்னாள் பிரதம மந்திரிகள் ஜவர்கலால் நேரு, அன்னை இந்திரா காந்தி, ராஜீவ் காந்தி, பெருந்தலைவர் காமராஜ் ஆகியோரின் திருவுருவப்படங்களை ஏந்தி நின்றனர்.
ஆர்ப்பாட்டத்தில் வலங்கைமான் பெரிய பள்ளிவாசல் ஜமாத் நிர்வாகிகள் செயலாளர் சலீம், பொருளாளர் ரகிமுதீன், துணைத் தலைவர் ஜாகிர் உசேன், வலங்கைமான் கோவில்பத்து பகுதி திமுக வார்டு செயலாளர் செல்வமணி, தொழிற்சங்க உறுப்பினர்கள் ஜெகபர் சாதிக், ஜாஹிர், வலங்கைமான் நகர மாணவர் காங்கிரஸ் தலைவர் சந்தோஷ், டைலர் ராஜா, அப்துல் ரகுமான் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.