பயிர் பாதிப்புகளுக்கு நிவாரணம் வழங்குக.இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அரியலூர் மாவட்ட குழுக் கூட்டத்தில் தீர்மானம்
மாவட்டத் தலைநகர் அரியலூரில் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் தோழர் ப. கலியபெருமாள் அவர்கள் தலைமையில் நடைபெற்ற மாவட்ட குழு கூட்டத்தில் மாநில நிர்வாகக் குழு உறுப்பினர் தோழர்,மு. அ. பாரதி அவர்கள் கலந்து கொண்டு, கட்சி உறுப்பினர் பதிவு முடித்தல், கட்சி 100 ஆம் ஆண்டு விழா மற்றும் மூத்த தோழர் ஆர், நல்லகண்ணு அவர்களின் 100ம் ஆண்டு பிறந்த தின விழா, இளைஞர் பெருமன்ற மாநில மாநாடு, ஜனசக்தி சந்தா அதிகரித்தல், ஆகியன குறித்து வழிகாட்டுதலோடு விளக்கிப் பேசினார்.
கூட்டத்தில் மாவட்டச் செயலாளர் சொ,ராமநாதன், முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் T,தண்டபாணி. மாவட்ட குழு உறுப்பினர் G, ஆறுமுகம், அரியலூர் ஒன்றியம் து,பாண்டியன், மொ, மணி, திருமானூர் ஒன்றியம் மு. கனகராஜ், தா, பழூர் ஒன்றியம் இ, முருகேசுவரி, தேவ சகாயம், S, அபிமன்னன், ரெங்கசாமி மற்றும் ஜெயங்கொண்டம் ஒன்றியம் உள்ளடங்கிய மாவட்ட குழு உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
நிறைவேற்றப்பட்ட தீர்மானம்: சமீபத்தில் தொடர்ச்சியாக பெய்த மழையினால் அரியலூர் மாவட்டத்தில் நெற்பயிர், மக்காசோளம், நிலக்கடலை, பருத்தி உள்ளிட்ட பயிர்கள் வீணாகிப் போய் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர், தமிழக அரசு கணக்கிட்டு பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கிட வேண்டும். மாவட்ட முழுக்க நீர் வரத்து வாய்க்கால் ஏரி, குளம்-குட்டைகளில் உள்ள ஆக்கிரமிப்புகளை உடன் அகற்றப்பட வேண்டும், சேதம் அடைந்த சாலைகளை செப்பனியிடப்பட வேண்டும், கட்சி 100 ஆம் ஆண்டு துவக்க தினமான நவம்பர் 26 மாவட்ட முழுக்க கட்சிக்கொடி சிறப்பாக ஏற்றுவது, மேற்கண்ட முடிவுகள் எடுக்கப்பட்டன.