D.பண்டரிநாதன்(எ) அண்ணாதுரை துணை ஆசிரியர்
புதுச்சேரி கவுண்டம்பாளையம் முத்துரத்தின மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற ரத்ததான முகாமை சபாநாயகர் செல்வம், அரசு கொறடா ஏ. கே. டி. ஆறுமுகம்,சட்டமன்ற உறுப்பினர் வி. பி. ராமலிங்கம் ஆகியோர் தொடங்கி வைத்தனர்.

உதவும் இதயம் பேரியக்கம் மற்றும் லயன்ஸ் கிளப் பாண்டிச்சேரி கோஸ்ட் முத்து ரத்தின அரங்க மேல்நிலைப்பள்ளி ஜிப்மர் ரத்ததான வங்கி அமைச்சூர் கேரம் அசோசியேஷன் சார்பில் மகாகவி பாரதியாரின் பிறந்த நாளை முன்னிட்டு மாபெரும் ஆறாவது ரத்ததான முகாம் கவுண்டம்பாளையம் முத்துரத்தின அரங்க மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது
முகாமில் புதுச்சேரி சட்டப்பேரவை தலைவர் செல்வம் அரசு கொறடா ஏ கே டி ஆறுமுகம் சட்டமன்ற உறுப்பினர் வி பி ராமலிங்கம் கலை பண்பாட்டு துறை இயக்குனர் கலியபெருமாள் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தனர்
தொடர்ந்து ஆசிரியை வேல்விழி நிகழ்ச்சியை நெறியாள்கை செய்ய கேஜி லியோ கராத்தே சங்க செயலர் சுந்தர்ராஜன் லயன்ஸ் கப் மாவட்ட ஆடுகள் சுபாஷ் சந்திரபோஸ் முன்னாள் ஆளுநர் செல்வகாந்தி ஆகியோர் தலைமை தாங்கினார் தொடர்ந்து தொழிலதிபர் ராஜகோபால் லயன்ஸ் கிளப் மாவட்ட தலைவர் குப்பன் சமூக சேவையை அருள் பூசணி பிரியா ஆகியோர் முன்னிலை வகித்தனர் பாலகிருஷ்ணன் மோகன்ராஜ் வரதராஜா லாரன்ஸ் கண்ணன் இருதய நாதன் விஜய் ஆனந்த் ஆரோக்கியதாஸ் பெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர் தொடர்ந்து பல்வேறு மருத்துவ பரிசோதனைகள் செய்யப்பட்டு ரத்த தானம் வழங்கினர் மேலும் விழாவில் டைம்ஸ் ஆப் தமிழ்நாடு இணை ஆசிரியர் தந்தை பிரியன் குருதி கொடை செய்தார். மேலும் இந்த விழாவில் உதவும் இதயம் பேரியக்கத்தின் நிறுவனர் புதுவைக்குமார் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.