கம்பம் பெடரல் வங்கி சார்பில் இலவச கண் சிகிச்சை பரிசோதனை
முகாம் தேனி மாவட்டம் கம்பம் நந்தனார் காலனியில் செயல்பட்டு வரும் நகர மக்களின் நன்மதிப்பை பெற்ற பெடரல் வங்கி சார்பில் இலவச கண் பரிசோதனை சிகிச்சை முகாம் வெகு சிறப்பாக நடைபெற்றது
இந்த முகாமிற்கு வங்கியின் மேலாளர் ஜெ. சந்திர மெளலீஸ்வரன் தலைமை உதவி மேலாளர் வி. நடராஜ் அசோசியேட் செ .சோமநாத் ஆகியோர் தலைமை தாங்கினார்கள் வங்கியின் ஆர்.எம் அவர்கள் ராஜ்பிரபு மல்லீஸ்வரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்
தேனி வைகை ஐ கேர் ஆப்டிகல் டாக்டர் தலைமையில் செவிலியர்கள் லட்சுமி நாகலட்சுமி ஆகியோர் முகாமில் பங்கேற்ற பொதுமக்கள் அனைவருக்கும் கண் பரிசோதனை செய்து அதற்கு தேவையான முதலுதவி ஆலோசனைகள் மற்றும் இலவச கண் கண்ணாடிகள் வங்கியின் சார்பில் இலவசமாக வழங்கப்பட்டன
இந்த முகாமில் சுமார் 500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் பங்கேற்று பயன்பெற்றனர் நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வைகை ஐ கேர் ஆப்டிகல் செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் கோபிநாத் வங்கி பணியாளர்கள் கார்த்திக் அர்ஜுனன் சரஸ்வதி மணிமாறன் ஆகியோர் மிக சிறப்பான முறையில் ஏற்பாடுகளை செய்து முகாமில் பங்கேற்ற அனைவரையும் கனிவுடன் உபசரித்து அனுப்பினார்கள்.