உலக அமைதி நிலவ பிரார்த்தனை மதுரை உயர்மறை மாவட்ட பரிபாலகர் கிறிஸ்துமஸ் வாழ்த்து
உலகம் முழுவதும் அமைதி நிலவ பிரார்த் திப்போம் என மதுரை உயர்மறை மாவட்ட பரி பாலகர் அந்தோணிசாமி சவரிமுத்து கிறிஸ்துமஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கிறிஸ்துமஸ் பண்டிகை வருகிற 25-ந்தேதி கொண்டாடப்படுகிறது. இதனையொட்டி , மதுரை உயர் மறை மாவட்ட பரிபாலகரும், பாளையங்கோட்டை மறை மாவட்ட ஆயருமான அந்தோணிசாமி சவரிமுத்து கூறிய தாவது:-
கிறிஸ்து பிறப்பு விழா, அன் பின் விழாவாக இருக்கிறது. ஒவ்வொரு ஆண்டும் டிசம்பர் 25ம் தேதியை கிறிஸ்து பிறப்பு பெருவிழாவை நாம் மகிழ்ச்சி யோடு கொண்டாடுகிறோம். இந்த உலகில் பல சமயத்தை சேர்ந்தவர்கள் வாழ்கின்றனர். கடவுள் நம் பிக்கை இல்லாதவர்களும் வாழ்கின்றனர். அன்பு, அமைதி, மகிழ்ச்சி, நம்பிக்கை, தோழமை போன்ற மதிப்பீடு களும், அனைத்து சமயங்கள் காட்டும் மதிப்பீடுகளும் ஒன்றே என்பதை நாம் அறிவோம்.
ஏசு பிறந்த பாலஸ்தீன நாட் டில் போர் பதற்றம் நீடிப்ப தால், அங்கு அமைதியான முறையில் கிறிஸ்துமஸ் கொண்டாட முடியாத சூழல் நிலவி வருகிறது. உலக நாடுகள் பலவற்றிலும் போர், வன் முறை தலைதூக்கி நிற்பதை பார்க்கிறோம். எனவேதான், திருத்தந்தை பிரான்சிஸ், கிறிஸ்துமஸ் கொண்டாடினால் மட்டும்போதாது , உலக அமைதிக்காக ஏசுவிடம் பிரார்த்திக்க வேண்டும்
என்று அறிவுறுத்தி உள்ளார். எனவே அனைவரது மனதி லும் மகிழ்ச்சியும், அமைதியும் நிலைக்கவும் பிரார்த்தனை செய்வோம், என அனைவருக்கும் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்கள்.
கூறினார்.