பிரபு திருப்பூர் மாவட்டம்
தாராபுரம் செய்தியாளர்
செல் :9715328420
தாராபுரத்தில் தந்தை பெரியாரின் 51-ஆம் ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு ,திமுக வினர் முழு உருவ வெண்கலச் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை.
திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தில் நகர திராவிடர் கழகம் மற்றும் நகர திமுக சார்பில் அறிவுலக தந்தை பெரியாரின் 51ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
திமுக நகர செயலாளர் சு முருகானந்தம் தலைமையில், திருப்பூர் தெற்கு மாவட்ட செயலாளர் இல. பத்மநாபன் முன்னிலையில் தாராபுரம் தீவுத்திடல் பூங்காவில் உள்ள தந்தை பெரியாரின் முழு உருவ வெண்கல சிலைக்கு மாலைகள் அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தொடர்ந்து திமுக தலைமை செயற்குழு உறுப்பினர் தனசேகர் ,மாவட்ட வழக்கறிஞரணி அமைப்பாளர் செல்வராஜ்,
பெரியாரின் புகழையும், கொள்கையையும் விளக்கி தொண்டர்கள் கோஷமிட்டனர்.
நடைபெற்ற அஞ்சலி நிகழ்ச்சியில் திமுக அவை தலைவர் கதிரவன், தாராபுரம் ஒன்றிய செயலாளர் எஸ் வி செந்தில் குமார் நகர் மன்ற தலைவர் பாப்பு கண்ணன் நகர துணை செயலாளர் கமலக்கண்ணன் மற்றும் திமுக, திக, ஆதித்தமிழர் பேரவை, தமிழ் புலிகள் கட்சியினர். உள்ளிட்ட தோழமைக் கட்சியினர் மற்றும் திமுகவினர் 300-க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.