பெரம்பலூர் மாவட்டத்தில், மாவட்ட தி.மு.க.சார்பில்,
பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்களின் 51- வது நினைவு தினத்தை முன்னிட்டு, மாவட்ட கழக அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு, மாவட்ட கழக பொறுப்பாளர் வீ.ஜெகதீசன் தலைமையில், சட்டமன்ற உறுப்பினர் எம்.பிரபாகரன் முன்னிலையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதன் பிறகு பழைய பேருந்து நிலையத்தில் உள்ள அவரது திருவுருவச் சிலைக்கும் மாலை அணிவித்து மரியாதை செய்யப்பட்டது .

இதில் மாவட்ட ஊராட்சி குழுத் தலைவர் குன்னம் சி. ராஜேந்திரன், மாநில ஆதிதிராவிடர் நலக்குழு துணைச் செயலாளர் பா. துரைசாமி, தலைமை செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் என்.ராஜேந்திரன், மாவட்ட கழக துணை செயலாளர்கள் டி.சி.பாஸ்கர், நூருல்ஹிதா இஸ்மாயில், ஒன்றிய கழக செயலாளர்கள் ம.ராஜ்குமார் தி.மதியழகன்,எஸ். நல்லதம்பி, ஒன்றிய கழக பொறுப்பாளர்கள் டாக்டர் செ.வல்லபன், ந.ஜெகதீஸ்வரன், மாவட்ட இளைஞர் அணி அமைப்பாளர் து.ஹரிபாஸ்கர், மாவட்ட வழக்கறிஞர் அணி துணை அமைப்பாளர் கே.ஜி.மாரிக்கண்ணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் மகாதேவி ஜெயபால், அமைப்பு சாரா ஓட்டுநர் அணி மாவட்ட அமைப்பாளர் எம்.மணிவாசகம்
உள்ளிட்ட ஒன்றிய, நகர, பேரூர் மற்றும் கிளைக் கழக நிர்வாகிகள் பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள், துணை அமைப்பாளர்கள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.