பிரபு தாராபுரம் செய்தியாளர்
செல் :9715328420
திருப்பூர் மாவட்டம் தாராபுரம் நகர அ.தி.மு.க. சார்பில், கட்சியின் நிறுவனரும், முன்னாள் தமிழக முதல்-அமைச்சருமான எம்.ஜி.ஆரின் 37 -ஆம் ஆண்டு நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னதாக திருப்பூர் காமராஜபுரம் சாலை, பகுதியில் அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த எம்.ஜி.ஆரின் உருவப்படத்துக்கு,தாராபுரம் நகரச் செயலாளர் சி ஆர் ராஜேந்திரன் மாலை அணிவித்து, பூஜைகள் செய்து,மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
அதனைத் தொடர்ந்து, 300-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் கருப்பு சட்டை அணிந்து அதிமுக கழக கொடி ஏந்தி காமராஜபுரம் சின்னக்கடைவீதி, டி.எஸ் கார்னர், பெரியகடை, வீதி பூக்கடை,கார்னர் வழியாக பேரணியாக அண்ணா சிலை வந்தடைந்தனர் . அங்கு பழைய நகராட்சி அலுவலகம் எதிரே அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த
எம்.ஜி.ஆர்.திருவுருவப்படத்திற்கு கட்சியினர் மலர் தூவி கழகப் பொருளாளர் விண்ணப்பம் என்ற பழனிச்சாமி உடன் அதிமுகவினர் நினைவஞ்சலி செலுத்தினர்.இதில் ஒன்றிய செயலாளர் சென்னை பாலு மாவட்ட தொழிலாளர் அணி அமைப்பாளர் பங்க் மகேஷ் குமார், மாவட்ட கவுன்சிலர் சத்தியபாமா, குளத்துப்பாளையம் பேரூர் கழகச் செயலாளர் பைப் ரவி,மாவட்ட அம்மா பேரவை பொருளாளர் தாரா. அரசகுமாரன். கௌரி சித்ரா செல்வி,உள்ளிட்ட கட்சியினர் திரளாக கலந்து கொண்டனர்.
இதேபோன்று ஓபிஎஸ் ஆணையினர் எம்ஜிஆரின் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மலர் தூவி 3 நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினர் இதில் அவைத் தலைவர் வேதா நகரச் செயலாளர் ஜவகர் அட்லி ரமேஷ் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.